மணலி மாத்தூரில் மாற்றுத்திறனாளிகள் விழுதுகள் சேவை மையம் துவக்க விழா……

செங்குன்றம், நவம்பர் 27:
சென்னை மணலி அடுத்த மாத்தூரில் உள்ள சமுதாய நல மருத்துவமனையில் மாற்று திறனாளிகளின் நலத்துறை சார்பில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சமூக பராமரிப்பு சேவை மையமான கட்டணமில்லா விழுதுகள் மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், மாதவரம் தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.விஜய் பிரபு கலந்து கொண்டு விழுதுகள் மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர்.பின்னர் மையத்தில் சிகிச்சை பெற வந்த சிறப்பு குழந்தைகளிடம் நலம் விசாரித்து அதிகாரிகளிடம் பாடத்திட்ட முறை சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தனர். இந்த மையத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு பிசியோதெரபி, செயல்முறை கற்றல் முறை, கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி, கண் பார்வை அளவியல், உளவியல் சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளும் சிறப்பு கல்வி உபகரணங்களுடன் வழங்கப்படுகிறது.