கோவை–பெண்களுக்கான யோகா சாதனசாலா மையம் திறப்பு விழா..
கோவை., ஏப்., 14 :கோவை, சிங்காநல்லூர், ஜோதி நகர், உப்பிலிபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட யோகா சாதனா சாலா மையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆயுர்வேத டாக்டர். ராஜ்கபூர் சுல்தான் கலந்து கொண்டார். இந்த யோகா மையத்தில் டாக்டர். தரணி பிரியங்கா கூறுகையில் பெண்களுக்காகவே சிறப்பு யோகா மையமாக இது திகழும் என்றும். மேலும் மே1 முதல் 30 வரை சகி என்கிற பெண்களுக்கான யோகா பயிற்சி நடத்தப்படுகிறது. இது முக்கியமாக பெண்களுக்கானPCOS, PCOD, தைராய்டு பிரச்சனைகளிலிருந்து விடுவித்து, அவர்கள் முழுமையான நல்வாழ்வைப் பெற உதவ உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான நலத்திட்டம் ஆகும்.இத்திட்டம் யோகா, உணவியல் மற்றும் உணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நீடித்த வாழ்க்கை முறை மாற்றங்களை உருவாக்குகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் யோகானந்த அன்னராஜ் ராபர்ட், தேவராஜ், உமாதேவி மற்றும் யோகா உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்