fbpx
Others

பூங்காக்கள் போன்ற இடங்களில் மின் இணைப்புகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் சூழலில் கோவை காவல்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. கோவை சரவணம்பட்டியில் உள்ள குடியிருப்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவில் சறுக்கு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சேதமடைந்து தொங்கி கொண்டு இருந்த மின் வயரில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தைகள் ஜியான்ஸ் ரெட்டி, பிரியா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.மின்கசிவு குறித்து ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தும், குடியிருப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.பூங்காவில் 2 சிறார்கள் இறந்த நிலையில் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது, அதில்,”‘குடியிருப்பு பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள், மின் இணைப்புகளை அவ்வப்போது மின்வாரிய ஊழியர்களை கொண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலையோரங்களில் மின்சார பராமரிப்பு பணி நடைபெறும் பகுதிகளில் கவனமாக செல்ல வேண்டும். பூங்காக்கள் போன்ற இடங்களில் மின் இணைப்புகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். சுவர்களிலும் மேற்கூரைகளிலும் ஈரப்பதம் இருந்தாலோ அல்லது மழை நீர்க்கசிவு ஏற்பட்டாலோ சரிசெய்யுங்கள். இடிந்து விழும் நிலையில் கட்டடங்கள், மரங்கள், மரக்கிளைகள் இருந்தால் மாநகராட்சிக்கு சொல்ல வேண்டும். வீடுகளில் மின்சாரப் பழுது ஏற்பட்டால் மின் வாரிய ஊழியர்கள் மூலம் சரி செய்ய வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close