fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கோவை ஆட்சியருக்கு கொரோனா….! தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!

Coimbatore collector affected by corona

கோவை:

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்திலும் தாக்கம் உச்சத்தில் உள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில், கொரோனா ஒழிப்பு பணிகளில் மக்களுக்காக தீவிர பணிகளில் ஈடுபட்டிருந்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.முதன்முறையாக தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்ட ஆட்சியர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close