fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

திமுக எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு பலி…! கட்சி தலைமை அதிர்ச்சி!

DMK MLA son dead

சென்னை: திமுக எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை தந்திருக்கிறது.

நெல்லை பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருபவர் மொய்தீன் கான்.  திமுகவை சேர்ந்தவர். 2006ம் ஆண்டு அக்கட்சியின் ஆட்சி காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராகக பதவி வகித்தவர்.

இதே தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று சட்டசபைக்கு தேர்வானவர். அவரது மகன் காஜா பீர் முகமது (வயது 53). காய்ச்சல், சளி பிரச்னையால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இந் நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்து உள்ளார். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close