fbpx
Others

பிரதமர் மோடியின் 11 ஆண்டு சாதனை கூட்டங்கள்–பாஜக திட்டம்..

அமெரிக்காவில் பிரதமர் மோடி: வெள்ளை மாளிகை விருந்து முதல் முக்கியப் ...மத்​தி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அரசு, நேற்​றுடன் 11 ஆண்​டு​களை நிறைவு செய்​திருக்​கிறது. இந்த 11 ஆண்​டு​களில் மத்​திய அரசின் சாதனை​களை நாட்டு மக்​களிடம் விளக்​கும் வகை​யில் பாஜக ஆளும் மாநிலங்​களில் பல முக்​கிய நிகழ்ச்​சிகளை பாஜக தொடங்கி உள்​ளது. குறிப்​பாக பாஜக ஆளும் உ.பி.​யின் 75 மாவட்​டங்​களி​லும் பிரதமர் மோடி ஆட்​சி​யின் சாதனை​களை விளக்​கும் புகைப்​படக் கண்​காட்சி நடத்​தப்​பட்டு வரு​கிறது. இன்று ஜுன் 12 முதல் 14 வரை, விக் ஷித் பாரத் சங்​கல்ப்சபை கூட்​டங்​கள், கோட்ட அளவில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளன.இவை அனைத்​தி​லும் சிறு​பான்​மை​யினரை கவரும் உத்​தியை நேற்று முதல் பாஜக கையாள தொடங்கி உள்​ளது. இதில், உ.பி.​யின் மசூ​தி​கள், தேவால​யங்​கள் மற்​றும் குருத்​து​வா​ராக்​கள் முன்​பாக சவு​பால் எனும் சிறப்​புக் கூட்​டங்​களை பாஜக நடத்​துகிறது. பிரதமர் மோடி​யின் 11 ஆண்டு கால சாதனை விளக்க விவாதங்​கள் இதில் நடை​பெற உள்ளனஇவற்​றில் குறிப்​பாக ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை முக்​கிய அங்​கம் வகிக்க உள்ள​து..இந்த கூட்​டங்​களில் உத்தர பிரதேச பாஜக சார்​பில், பிரதமர் மோடி​யின் 11 ஆண்டு கால சாதனை விளக்க நூல்​கள், அரசி​யலமைப்​புச் சட்​டம் குறித்த நூல்​கள் இலவச​மாக விநி​யோகிக்​கப்பட உள்​ளன.இன்று ஜூன் 12-ம் தேதி, சிறு​பான்​மை​யினருக்​காக, ‘முஸ்​லிம்​களுக்​கான பிரதமர் மோடி​யின் செய்​தி’ என்ற தலைப்​பில் லக்​னோ​வில் மாநாடு நடை​பெறுகிறது. ஜுன் 21-ல் வரவிருக்​கும் சர்​வ​தேச யோகா தினத்​தன்று இஸ்​லாமிய மதரஸாக்​களில் யோகா பயிற்சி நடை​பெறும்.இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. பாஜக சிறு​பான்​மைப் பிரி​வின் தலை​வர் குன்​வர் பாசித் அலி கூறுகை​யில், ‘‘மதரஸாக்​களின் பல்​வேறு தேர்​வு​களில் சிறந்து விளங்​கும் மாணவர்​கள் ‘தேஷ் கா பைகம், பிர​திபா கோ சம்​மான்’ என்ற நிகழ்ச்​சி​யின் மூலம் பாராட்​டப்பட உள்​ளனர்.சுதந்​திரப் போராட்ட தியாகி​களின் குடும்​பத்​தா​ரும் பாராட்​டப்​படு​வார்​கள்’’ என்​றார். பாஜக எம்​.பி., எம்​எல்​ஏ.க்​கள், மாநில தலை​வர்​கள், ஆசிரியர்​கள், வழக்​கறிஞர்​கள், சமூக சேவை​யாளர்​கள் மற்​றும் சிறு​பான்மை சமூகத்​தின் இளம் திறமை​யாளர்​கள் இந்த நிகழ்ச்​சிகளில்​ பங்​கேற்​க அழைப்​பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

Related Articles

Back to top button
Close
Close