தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் லஞ்சம் தாண்டவமா ? — சிறப்பு செய்தி ..
தமிழ்நாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு தாசில்தார் லஞ்சம் !!! தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டியில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு சுப்பிரமணி என்பவரிடம் தடையில்லா சான்று வழங்குவதற்கு ரூ 1லட்சம் லஞ்சமாக வேண்டுமென தாசில்தார் காதர் ஷெரீப் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த லஞ்சப்பணத்தை தர விருப்பம் இல்லாத சுப்பிரமணி தேனி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியன் ஆண்டிபட்டி தாசில்தார் காதர் ஷெரிப் பிடம் லஞ்சம் கொடுக்கும் போது D S P சுந்தரராஜன் தலைமையிலான பத்தி ற்கும் மேற்பட்ட போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பிறகு அறைக்குள் சென்று விசாரணை நடத்திய போது தாசில்தார் காதர் ஷெரிப்பிற்கு நெஞ்சு வலி ஏற்படவே, அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்…………………………… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி