அதிமுக மற்றும் பாமக இடையே தேர்தல் கூட்டணி உறுதி – ஒப்பந்தம் கையெழுத்தானது !

நாடாளுமன்ற தேர்தளுக்காக, அதிமுக – பாமக இடையேயான தேர்தல் கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற சந்திப்பில் அதிமுக-பாமக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டணியை இறுதி செய்வதற்காக பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக – பாமக கூட்டணி உறுதியானது. இதில் அதிமுக – பாமக இடையேயான நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ், பாமக சார்பில் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.















