பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி மாரியம்மன் ஆலய மூன்றாவது கும்பாபிஷேக விழா..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமீன் பிரான் தர்கா தெருவில் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி மாரியம்மன் ஆலய மூன்றாவது கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அரிசி மொத்த வியாபாரி தியாகராஜன் தலைமை தாங்கினார். ஜெயந்தி தியாகராஜன், கண்ணன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மகாத்மா காந்தி முதியோர் இல்ல துணைத்தலைவர் எஸ் ஆர் பி பென்ஸ் பாண்டியன், சிற்பி தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக யாக சாலைகள் அமைத்து 108 ஓம திரவியங்கள் கொண்டு பூஜித்த புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ நாக சக்தி மாரியம்மன் க்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ நாக சக்தி மாரியம்மன் அருள் பெற்று சென்றனர்.