கற்றுக் கொள்வோம்… உடலின் மொழி !

உணவை கேட்கும் மொழி “பசி”
தண்ணீரை கேட்கும் மொழி “தாகம்”
ஓய்வை கேட்கும் மொழி “சோர்வு, தலைவலி”
நுரையீரலை தூய்மை செய்யும் மொழி “தும்மல், சளி, இருமல்”
உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி “காய்ச்சல்”
காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி “வாய் கசப்பு மற்றும் பசியின்மை”
காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி “உடல் அசதி”
எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி “வாந்தி”
நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி “பேதி”
இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி “வியர்வை”
நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி “உறக்கம்”
நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி “சிறுநீர் கழித்தல்”
உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி “மலம் கழித்தல்”
எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.















