fbpx
Others

ராணிப்பேட்டை- கலைஞரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது..

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் திமுக ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் ஏ வி சாரதி அலுவலகத்தில் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இவ்வலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருஉருவப் படத்திற்கு ஏவி சாரதி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்இந்நிகழ்வின் போது ஆற்காடு நகர மன்ற உறுப்பினர் சி தட்சணாமூர்த்தி, கம்பி என் கண்ணன், திமிரி ஒன்றிய அவை தலைவர் பார்த்தசாரதி, வெங்கடாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் புதூர் சுரேஷ், ஆனைமல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம், வளையாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏவி ராஜா, உள்ளிட்ட கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close