Others
தேனி- கம்பம் உலக குருதி கொடையாளர் தினசிறப்பு செய்தி..
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இன்று (14.06.2024) தேனி மாவட்டம்கம்பம்அரசுமருத்துவமனையில் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் இரத்ததானம் வழங்கினர்.நிகழ்விற்கு தலைமை மருத்துவர் பொன்னரசன் தலைமை தாங்கினார்.மருத்துவர் பிரதீப், முன்னிலை வகித்தனர். இரத்தப் பிரிவு தீபா,நாகராஜ்இரத்தக்கொடையாளர்களை வரவேற்றனர்.இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக சுருளிப்பட்டி அன்புராஜா, ஆசிரியர் பாண்டி, ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் மேனேஜர் சங்கர், குருதி தியாகராஜன், நவநீதி, சஞ்ஜீவி, சென்றாயன் ஆகியோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.இரத்ததானம் செய்த கொடையாளர்கள் அனைவருக்கும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அன்பு வாழ்த்துக்கள்.நன்றி. வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்..