தேனி-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி-இரத்ததான முகாம் செய்தி.
வணக்கம்.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உத்தமபாளையம் வட்ட கிளை சார்பாக ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு இன்று (10.08.2024) கம்பம் வ.உ.சி.திடலில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை கம்பம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெ.பொன்னரசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.சிறப்பு விருந்தினராக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் சுருளிவேல் அவர்கள் இரத்த தானம் செய்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.நிகழ்வில் சின்னமனூர் ஒன்றியத்திலிருந்து மலை இராணுவ பயிற்சி மைய நிறுவனர் கொடியரசன், சின்னமனூர் ரெட் கிராஸ் தலைவர்முத்துசாமி,செயலர்எல்.கே.சிவமணி உத்தமபாளையம் ரெட் கிராஸ் தலைவர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, மருத்துவர் பூர்ணிமா ஆகியோர் கலந்துகொண்டனர்.இரத்ததான முகாம் ஏற்பாடுகளை கம்பம் ஒன்றிய நிர்வாகிகள் ஜி.பாண்டி ஆசிரியர், குருதி தியாகராஜன், சுருளிப்பட்டி அன்புராஜா, செல்வன்ஆசிரியர்,எம்.கணபதிஆகியோர்மிகச்சிறப்பாகஒருங்கிணைத்து இரத்ததான முகாமை வெற்றி பெறச் செய்தனர்.இரத்த தானம் செய்த இரத்தக் கொடையாளர்கள், இரத்ததான முகாமிற்கு உதவிகள் செய்த நன்கொடையாளர்கள் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி. வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்.