தேனி – அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப்போக்கு..?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் நகராட்சியின் மெத்தனப்போக்கு !!! தேனி – அல்லிநகரம் நகராட்சியின் 7 – வது வார்டு… அண்ணா நகர் முதல் தெருவில், குப்பைக் கழிவுகள் மற்றும் கழிவு நீர் சாக்கடை சரிவர அகற்றப் படாமல், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியும் அவலநிலை !!! தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் நகராட்சியின்
மெத்தனப்போக்குதேனிஅல்லிநகரம்நகராட்சியின் 7 வது வார்டு அண்ணா நகர் முதல் தெருவில், கழிவுநீர் சாக்கடை மற்றும் குப்பைக் கழிவுகள் சரிவர அகற்றப் படாமல், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு தாரை வார்த்தும் அவலநிலை!!! ஆங்காங்கேகுப்பைக்கழிவுகளை,கொட்டிவைத்து,கழிவுகளையும்சரியாகஅப்புறப்படுத்துவது இல்லை!முற்றிலும்சாலைபழுதாகி பல மாதங்கள்
ஆகின்றன இந்த சாலையை பழுதுபார்க்க ஏன் தயங்குகிறது நகராட்சி மற்றும் சுகாதார நிர்வாகம் ? ஆங்காங்கே தெருக்களில் உள்ள கழிவுநீர் சாக்கடைகளை சரியாக சுத்தப் படுத்துதல் கிடையாது ! அவ்வாறு சுத்தம் செய்து குப்பை கழிவு மற்றும் சாக்கடை கழிவு களை அள்ளி அந்த இடத்திலேயே போட்டு விட்டு, அவைகளை உடனடியாக அப்புறப்படுத்துவதும் கிடையாது ஏன்? இதற்காகத்தான் இந்தப் பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளதா ? தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த வார்டு உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்!. இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதற்கா ? அந்தந்த வார்டு மக்கள் தேர்வு செய்தது இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கவா ? அந்தந்த பகுதி சுகாதாரத்துறை , நகராட்சி அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர்! இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதற்கா? குழாய்வரி, சொத்துவரி, பாதாள சாக்கடை வரி, தொழில்வரி இவற்றை எல்லாம் தடாலடியாக வசூல் செய்ய ஆர்வம் காட்டுகின்ற நகராட்சி நிர்வாகம் ஏன் இந்த பொதுப்பராமரிப்பு பணிகளில் அக்கறை எடுப்பதே இல்லை? இந்த இனங்களையெல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கவா? இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் பல்வேறுவிதமான நோய்களை பொதுமக்களுக்கு இலவசமாகமே …… வழங்கப்படும் சூழல் தான் ஏற்படும்! அதன் பிறகு விழிப்புணர்வு முகாம்களும், நோய் தடுப்பு முகாம்களும் நடத்துவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை! வரும் முன் காப்போம் என்பதெல்லாம் வெறும் விளம்பரத்திற்கு மட்டும் தானோ ? ஆதலால் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக போர்க்கால கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்!!! ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி