சிறப்பு செய்திகள்….
மதுரையில் மகளிர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு.தீ விபத்து காரணமாக கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல்.தீ விபத்து சம்பவத்தில் பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழப்பு.மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் நிகழ்ந்த சோகம். நாகை: மீனவர்கள் வேலை நிறுத்தம்இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து நாகை மாவட்டம் செருதூரில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு400க்கும் மேற்பட்ட பைபர்கள் படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு; மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை அரசுடன் சமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில்பயணம்செய்வதற்கானடிக்கெட்முன்பதிவுஇன்றுதொடங்குகிறது.அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.ஜனவரி 10ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வோர் இன்று டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.ஜன.11இல் பயணிப்போர் 13ஆம் தேதியும். ஜன. 12இல் பயணிப்போர் 14ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையன்று பயணம் மேற்கொள்வோர் செப். 15இல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை, புரட்டாசி மாதபூஜைகளுக்காகசபரிமலைகோயில்நடைநாளை(13ம்தேதி)திறக்கப்படுகிறது.சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் கோயில் நடை திறந்திருக்கும்.நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோயில் நடை திறப்பார்.நாளை மறுநாள் (14ம் தேதி) முதல் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் தொடங்கும்.ஓணம் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் பக்தர்களுக்கு ஓண விருந்து அளிக்கப்படுகிறது.வரும் 21ம் தேதி வரை கோயில்நடைதிறந்திருக்கும்.ஆன்லைனில் முன்பதிவுசெய்யும்பக்தர்களுக்குமட்டுமேதரிசனத்திற்குஅனுமதிஅளிக்கப்படும். நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் திறக்கப்படும்.