கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை கையாளும் முறை குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை வெளியீடு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடலை அடக்கம் செய்யும் வழிமுறைகள் பின்வருமாறு :
1.இறந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் பையை கொண்டு சுற்றி, அந்த பையின் மேல்புறத்தில் 1% சோடியம் ஹைப்போ குளோரைடு என்ற கிருமி நாசினி கொண்டு தெளிக்க வேண்டும்.
2.இறந்தவர்களின் உடலை கையாளும் பணியாளர்கள் கண்டிப்பாக சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் பாதுகாப்பான கிளவுஸ் அணிந்திருக்க வேண்டும்.
3.இறந்தவரின் முகத்தை குடும்பத்தினர் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், உடலை தொடாமல் காட்டலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடலை கையாளும் பணியாளர்களை தவிர வேறு யாரும் உடலை தொட அனுமதியில்லை.
4.இறந்து போனவரின் உடலை தொடாமல் மேற்கொள்ளப்படும் மத சடங்குகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
5.கொரோனாவால் இறந்தவரின் உடலை குடும்பத்தினர், குளிப்பாட்ட மற்றும் கட்டிப்பிடிக்க மற்றும் முத்தமிடவோ அனுமதியில்லை.
6.உடலை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்யும் போது குறைந்த அளவிலான நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
7.உடலை தகனம் செய்த பின்பு சாம்பலை குடும்பத்தினருக்கு வழங்கலாம். அதில் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















