திருப்பூர்-தனியார் பால் கொள்முதல் நிறுவனமுதலாளிகள்தப்பியோட்டம்.
திருப்பூர் அருகே தனியார் பால் கொள்முதல் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்குபணம் வழங்காமல் முதலாளிகள் தப்பியோட்டம்
திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அருகேயுள்ள செங்காட்டு பாளையத்தில் Twins Dairy Milks என்ற தனியார் பால் கொள்முதல் நிறுவனம் இயங்கிவந்துள்ளது இந்நிறுவனத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் பால் ஊற்றி வந்துள்ளனர்.மாத கணக்கில் பாலுக்கான பணத்தை வழங்காமல் இருந்த நிலையில் நிறுவனத்தின் முதலாளிகள் தலைமறைவாகியதால் இன்று (31.10.2023) பாதிக்கபட்ட விவசாயிகள் Twins Dairy Milks நிறுவனம் முன்பு 500 க்கும் மேற்பட்டோர் கூடினர்.தகவல் அறிந்த தெற்கு அவினாசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர், பல்லடம் துணை வட்டாட்சியர், பல்லடம் காவல் ஆய்வாளர், அவினாசிபாளையம் காவல் துறையினர் Twins Dairy Milks நிறுவனம் அமைந்துள்ள இடத்திற்கு நேரில் வந்து பாதிக்கபட்ட விவசாயிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர்.பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் ABT மகாலிங்கம், மாநகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் நேரில் வந்து விசாரித்து, இறுதியாக தமிழகவிவசாயிகள்பாதுகாப்புசங்கத்தின்சார்பில்சம்மந்தப்பட்டநிறுவனத்தின்பேரில்நடவடிக்கை எடுக்கக்கோரி அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.