திண்டுக்கல் மாவட்டகாவல்துறை செய்தி..
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் கைது- எஸ்.பி. அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில்ஈடுபட்டனர் இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த சிவகணேஷ்(21), சையத் இப்ராஹிம் (26), ரேணுகா (29), மணி (21), தனபாலன்(20), வினோத்பாண்டியன்(23), ரதின்(20), சிவகங்கையை சேர்ந்தவினோத்(19), தென்காசியை சேர்ந்த இசக்கிமுத்து (31) ஆகிய 9 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த நகைகளை பறிமுதல் செய்தனர்