தமிழக முதல்வரின் தனிப்பிரிவு–தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம்பற்றிபுகார்….
தமிழக முதல்வரிடம் மக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்தொடங்கப்பட்டுசெயல்பட்டுவருகிறது.இதையடுத்து, http://cmcell.tn.gov.in/register.php என்ற இணைய முகவரியில் மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்து, புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.இந்த தனிப்பிரிவுக்கு வரும் புகார்களில், தற்போது மாணவர்கள் அளிக்கும் புகார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கை பெற்ற மாணவர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.தனியார் பொறியியல் கல்லூரிகளில் சான்றிதழ்களை திரும்ப வழங்க கால தாமதம் செய்வது, கல்லூரி விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை, போதியபேராசிரியர்கள்இல்லை,தேர்வுகள்முறையாக நடத்தப்படுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.கடந்த ஜூன் மாதத்திலிருந்து மட்டும்கிட்டத்தட்ட500புகார்கள்முதல்வரின்தனிப்பிரிவுக்குவந்திருப்பதாகவும்,இவைஅண்ணாபல்கலைக்குஅனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும்தெரியவந்துள்ளது.சுமார்10ஆண்டுகளுக்குமுன்புதனியார்பொறியியல்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.55 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அது இதுவரை மறு ஆய்வு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், மாணவர்களிடமிருந்து தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது.