‘டை-எத்திலீன் கிளைக்கால்’ மத்திய சுகாதாரஅமைச்சகம் — எச்சரிக்கை..
ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகள் பலியான சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்துகிறது.இன்று5/10/25மாலை 4 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அவசர கூட்டத்துக்குஅழைப்புவிடுத்துள்ளது.சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில்அனைத்துமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள்,சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். காணொலி வாயிலாக இந்த கூட்டம் நடைபெறுகிறது.இந்த அவசர கூட்டத்தில் இருமல் மருந்துகளின் பகுத்தறிவு பயன்பாடு மற்றும் மருந்துகளின் தரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்.
டை-எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகலதயாரித்தது.
குழந்தைகளை பலி கொண்ட ‘கோல்ட்ரிஃப்’ (Coldrif) என்ற அந்த இருமல் மருந்தில், ‘டை-எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்குஇருந்ததாகஆய்வகஅறிக்கைஉறுதிப்படுத்தியுள்ளது.இந்த மருந்தை உற்பத்தி செய்த தமிழ்நாட்டின்காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ்கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.