டி.என்.பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 80). தனி யாக வசித்து வந்த இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப் பட்டு இருந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் பாப் பாத்தி வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. அதைப்பார்த்த அக்கம் பக் கத்தினர் வீட்டுக்குள் ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு பாப்பாத்தி உடல் முழுவதும் தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே தீயை அணைத்து அவரை மீட்ட பொதுமக்கள். சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக பெருந் துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி பாப்பாத்தி உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்