கோவை–இருஇளைஞர்கள்கஞ்சாவிற்பனை …போலீசார்கைது செய்தனர்..
கோவை மாவட்டம், தெலுங்குபாளையம், வேடப்ப
ட்டி ரோட்டில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக செல்வபுரம் காவல் நிலையத்திற்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செல்வபுரம் காவல் ஆய்வாளர் அழகுராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இளைஞர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விசாரணை செய்ததில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் இரண்டரை கிலோ அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த இளைஞர்களை விசாரணை செய்ததில், தெலுங்குபாளையத்தை சேர்ந்த பிரவின் (32) மற்றும் குமாரபாளையத்தை சேர்ந்த மாணிக்கம் (33) என்பது தெரியவந்தது. இது குறித்து காவல் ஆய்வாளர் அழகுராஜ் கூறுகையில் இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்