செல்வப் பெருந்தகை எம் எல் ஏ-சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்
சிலம்ப வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு செல்வப் பெருந்தகை எம் எல் ஏ கோரிக்கை!
தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் முதலாவது மாநில அளவிலான சிலம்ப போட்டி சென்னை அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டுஅரங்கில்நடைபெற்றது.மாணவர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தை உலக சிலம்ப ஆசான்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர். என்.ஆர். தனபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் அனைவரையும் பேரவை தலைவர். அண்ணாவி.ஜெ. ஈசன் வரவேற்றார்.அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலை முதுமணி. ஆர் .முருகக்கனி பேரவை பொதுச் செயலாளர். நாஞ்சில் சுரேஷ் முன்னிலை வகித்தனர் .முதல் நாள் சிலம்ப போட்டியை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி தொடங்கி வைத்தார் இரண்டாம் நாள் தனித்திறமை மற்றும் இறுதி போட்டிகளை ஸ்ரீ பெருமந்தூர் சட்டமன்ற உறுப்பினர்.கு. செல்வப் பெருந்தகை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் என். ஆர். தனபாலன் பேசும்போது ; தமிழ் பாரம்பரிய தற்காப்பு விளையாட்டான சிலம்பம் இந்திய முழுதும் பரவ வேண்டும் ஜல்லிக்கட்டுக்கு உரிமையை பெற்றது போல் சிலம்பத்திற்கும் உரிமை பெற்று அதன் மூலமாக மாணவர்களுக்கு பலனை தர வேண்டும் மேலும் சிலம்ப விளையாட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அற்புதமான விளையாட்டு எத்தனை மருத்துவம் இருந்தாலும் சிறந்த மருத்துவம் சித்த மருத்துவம் போல் எத்தனை தற்காப்பு கலைகள் இருந்தாலும் சிறந்த கலை சிலம்பகலை தொடர்ந்து பயிற்சி செய்து வருபவர்களுக்கு மாரடைப்பு மற்றும் கேன்சர் நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் சிலம்பத்திற்கு உண்டு.ஆகவே அனைவரும் கட்டாயம் சிலம்பம் பழக வேண்டும். அரசாங்கம் நல் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கு.செல்வப் பெருந்தகை எம். எல். ஏ. பேசும்போது சிலம்பம் மிகப்பெரிய எழுச்சி பெற்று இருக்கிறது. தமிழ்நாடு அரசு முதல்வர். மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுக்கு பல்வேறு வகையிலே ஆதரவை அளித்து வருகிறார். விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று தேசிய போட்டிகளை திறமையாக நடத்துகின்ற ஒரு மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறார்.சிலம்ப விளையாட்டை முதல்வர் கோப்பையிலும் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டியிலும் டெமோ செய்வதற்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.மாநில அளவிலும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிலம்பம் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பதக்கம் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு விரைவாக திட்டம் தீட்ட வேண்டும்.குறிப்பாக சிலம்ப வளர்ச்சி வாரியம் ஒன்றை அமைத்து சிறந்த திறமையான ஆசான்களை அந்த வாரியத்தில் சேர்த்து அதன் மூலமாக மாவட்ட போட்டி. மாநில போட்டி மற்றும் அரசு நடத்தும் போட்டிகளை நடத்தி நல்ல ஆதரவை இந்த பாரம்பரிய தமிழ் தற்காப்பு விளையாட்டுக்கு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு பேசினார்.போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிர்வாகிகள் ராஜேந்திரன்.நந்தகுமார். கஜேந்திரன். சரவணன். விமல் நாத் சண்முகப்பிரியா உட்பட அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் விரைவில் பாண்டிச்சேரியில் நடைபெறுகின்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் என்றும் அதில் வெற்றி பெறுபவர்கள் மே மாதம் மலேசியாவில் நடக்கின்ற சர்வதேச போட்டியில் கலந்து கொள்வார்கள் என்றும் தமிழ்நாடு சிலம்பம் பேரவை நிறுவன தலைவர். அண்ணாவி.
ஜெ. ஈசன் தெரிவித்தார்.