செய்தி துளிகள்…….
நவ.1 உள்ளாட்சி தினத்தன்று அனைத்துகிராமஊராட்சி களிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு. கிராம சபைக் கூட்டம் மதசார்புள்ள எந்த வொரு இடத்திலும் நடக்கக் கூடாது என அறிவுறுத்தல் (2) தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.நவ.1 முதல் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலைசென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே, பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெர்வித்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்( 3)சமூகவலைதளங்களில் நாம் பதிவிடும் கருத்துக்கள் சில நொடியில் மக்களிடம் சேர்ந்து விடுகிறது – நமது கருத்துகள் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும். எதிரிகள் நம்மை இழிவு செய்தாலும் கண்ணியமாக பதில் தரவேண்டும் -முதல்வர்ஸ்டாலின்