கோவை — வால்பாறை பெரியார் நகர் பகுதியில் விபத்து….

28/1/26 யை அடுத்துள்ள தனியார் எஸ்டேட் பகுதிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்றும், அரசு பேருந்து ஒன்றும் இன்று காலை எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கின.தனியார் எஸ்டேட் தொழிலாளர்களை வழக்கம்போல் வேலைக்கு கொண்டு சென்ற டிராக்டர், பெரியார் நகர் பகுதியில் உள்ள சாலை வளைவில் சென்றபோது, எதிரே வந்த அரசு பேருந்துடன் திடீரென மோதியதாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்திருந்த தொழிலாளர்களில் சிலர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து நடந்ததை அறிந்ததும், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் எஸ்டேட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர்களில் சிலர் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதியான செய்தியாக உள்ளது. விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவைமாவட்டம் புகைபடகலைஞர் ஜெயப்பிரகாஷ் D