வசதிபடைத்த ஜோடிகள் ஓர் இடத்தில் கூடி, தங்களது கார் சாவியை குலுக்கல் செய்து, கையில் சிக்கும் கார் சாவியைக்கொண்டு ஜோடிகளை மாற்றிக்கொள்ளும் நிகழ்சிகள் சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், டிஜிட்டல் யுகத்தில், சமூக வலைதங்களின் உதவியுடன், துணைகளை மாற்றிக்கொள்ளும் அந்த ஆபத்தான விளையாட்டு இப்போதும் நடப்பதாக சில ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.அப்படி சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் பின்னணி தற்போது அம்பலமாகியுள்ளது. ‘மீவீ’ என்ற சேட்டிங் செயலி மூலம் துணை மாற்றும் ஆபத்தான விளையாட்டு நடக்கிறது என்கிறார்கள் இந்த விளையாட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள். சென்னையைச் சேர்ந்த 40 வயது கொண்ட தொழிலதிபரும், அவரது மனைவியும் இந்த துணை மாற்ற விளையாட்டை நடத்திவருவதாக தகவல்.எப்படி செயல்படுகிறது இந்தக்கும்பல்? ‘மீவீ’ செயலி மற்றும் முகநூல் பக்கத்தின் மூலம் துணை மாற்றும் விளையாட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் முதலில் ஜோடிகளின் சந்திப்பு நடக்கும். இரண்டாவது, நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகிகளின் வீடுகளில் கெட் டூ கெதர் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் மூலம் தம்பதிகளுக்கு இடையே நல்ல அறிமுகம் ஏற்படுகிறது. பின்னர், தம்பதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப வெளியூர் சாகச பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. தனிமையில் இருக்கும் வீடியோக்களையும், ஆடியோக்களையும் பதிவு செய்து, வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படுகிறது. ஆடியோ, வீடியோவைப்பார்க்கும் வசதிபடைத்த ஜோடிகள், துணை மாற்றும் விளையாட்டில் பங்கேற்க தூண்டப்படுகிறார்கள். சென்னையைத்தாண்டி, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களிலும் இந்த துணை மாற்றக்கும்பல் கிளை விரித்துள்ளது தெரியவந்துள்ளது. யாருடன் வேண்டுமாலும் ஜோடியாக அமர்ந்து சரக்கடிக்கலாம், சுற்றலாம், விளையாடலாம் என்பதால், இது தவறு இல்லை என்றும், மகிழ்ச்சியாக இருக்கவே இந்த ஏற்பாடு என்றும் கூறி ஏற்பாட்டாளர்கள் உசுப்பேத்தியுள்ளனர். குறிப்பாக, திருமண பந்தத்தை விட்டு தனிமையில் வசிக்கும் ஆண், பெண்களையே இந்த கும்பல் குறிவைத்து செயல்படுவது தெரியவந்துள்ளது.சென்னையில் ஆடம்பரமான கார்களில் வலம்வரும் இந்த கும்பல், தினம் ஒரு துணையுடன் சுற்றுவதும் தெரியவந்துள்ளது. தனியறை எடுத்து உல்லாசமாக இருக்க வாய்ப்பில்லாதவர்கள், சொகுசுக்கார்களிலேயே தனிமையை அனுபவிப்பதாகவும் இந்த விளையாட்டில் ஈடுபட்டவர்கள்தெரிவித்துள்ளனர்.மேலும் தன்னுடன் ஆடிப்பாடி, மகிழ்ச்சியாக இருந்த துணைக்கு பெண்மணி ஒருவர் நன்றி சொல்லும் ரகசிய வீடியோவும் வெளியாகியுள்ளது. தகவல்….?
Read Next
1 day ago
தமிழக பாஜகவில் மீண்டும் மிகப்பெரிய மாற்றங்கள்…..?
3 days ago
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரமாக செயல்படுவருகிறது–தமிழக காவல்துறை…
3 days ago
நீடாமங்கலம்–கழிவு மேலாண்மையின் 5 ‘R’கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்..
3 days ago
தேனி- தமிழக வெற்றி கழகம் ஆட்சி 100 வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
3 days ago
தேவசெய்தி 22 / 8 / 26
3 days ago
தேவசெய்தி 21 / 8 / 26
3 days ago
மனிதநேயத்துடன் கூடிய தீர்வை அரசு ஏற்படுத்த கோரிக்கை..!
3 days ago
செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடப்பது என்ன..?
3 days ago
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவு. ( 1931 – 2026 ) வயது 95
4 days ago
போடியில் டிட்டோ-ஜாக் சார்பாக 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.
Related Articles
அமைச்சர் ஆனந்த் புகழாரம்…
5 days ago
தேவசெய்தி 20 / 8 / 26
5 days ago
தேவசெய்தி 19 / 8 / 26
6 days ago
தேவசெய்தி 18 / 8 / 26
6 days ago
தேனி 80 ஆவது சுதந்திர தின விழா…
1 week ago
தேவசெய்தி 17 / 8 / 26
1 week ago
ஒரே நாளில் 11வகையான மது வகைகள் தடை நீக்கம்…
1 week ago

இது ஜெஸ்ட் டைம்பாஸ் என்று ஒரு தரப்பினரும், இது கலாச்சார சீரழிவு என்று இன்னோர் தரப்பினரும் விமர்சிக்கிறார்கள். தெரியாத துணையுடன் செல்லும் போது எதுவேண்டுமாலும் நடக்கலாம், மிரட்டி பணம் பறிக்கப்படலாம் என பல்வேறு ஆபத்துகளைக்கொண்ட இந்த விளையாட்டை போலீசார் தடுத்து நிறுத்துவார்களா? இந்த வினோத கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?