Others
சிலம்ப போட்டியில் மாதவரம் எஸ். ரோஷினி தங்கம் வென்றார்!
முதல்வர் கோப்பை சிலம்ப போட்டியில் மாதவரம் எஸ். ரோஷினி தங்கம் வென்றார்!சென்னைக்கு அருகில் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழக அரங்கில் நடந்த முதல்வர் கோப்பைக்கான சிலம்ப போட்டியில் மாதவரம் எஸ். ரோஷினி தங்கம் வென்றார்! விளையாட்டு போட்டியில்
எஸ்.ரோஷினி வெற்றி பெற்று தங்கபதக்கமும், ரூஒரு லட்சத்திற்கான காசோலையும் பெற்றார்.முன்னதாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த சென்னை மாவட்ட போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு சென்றார்.இவர் கொளத்தூர் எவர்வின் பள்ளியின் பிளஸ்டூ மாணவி
ஆவார்.மாதவரத்தில் உள்ள பூலித்தேவன் சிலம்ப பயிற்சி பள்ளியில் பயிற்சியாளராக பல மாணவ, மாணவிகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.