சத்தியமங்கலம்–காமதேனு கல்லூரியில் கைத்தறி கண்காட்சி..சிறப்பு செய்தி.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு மாவட்ட கைத்தறி துறை இணைந்து கைத்தறி கண்காட்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது .இவ்விழாவிற்கு காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் ஆர் பெருமாள்சாமி தலைமை வகித்தார் , கல்லூரியின் செயலர் பி .அருந்ததி இணை செயலர் பி .மலர்செல்வி , புல முதன்மையர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .முதல்வர் குருமூர்த்தி வரவேற்றார் .இக் கண்காட்சியை ஈரோடு சரக உதவி அமலாக்க அலுவலர் கா.ரா. ஜெயவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுகண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தார் .விழாவில் கைத்தறி கட்டுப்பட்டு அலுவலர் ஜி மாலதி மற்றும் இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் பரமசிவம் ஆகியோர்கலந்து கொண்டனர் . இக் கைத்தறி கண்காட்சியின் மூலமாக நலிந்து வரும் கைத்தறி தொழிலை நவீனத்துவம் படுத்தி மேம்படுத்த வழிவகை செய்யப்படுகிறது .கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும்
மாணவர்களிடத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வம் மற்றும் வழிகாட்டுதல் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை புதிய தொழில் தொடங்குவதற்கு அரசு மானியம் மற்றும் அரசு தொழில்துறைஅணுகுமுறைபோன்றவிஷயங்கள்எடுத்துரைத்தார் .இக்கண்காட்சிக்கு இந்திய அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர் அக்னிதேவன் பேசுகையில் கைத்தறி தொழிலில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய தொழில்நுட்பங்கள் குறித்து கைத்தறி நெசவாளர்களுக்கு விளக்கி கூறினார். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்