Others
கோவை–கேரளா லாட்டரி விற்ற இருவர் கைது ! ஒருவரை தேடும் போலீஸ் !
கோவை-செல்வபுரம், ஹவுசிங் யுனிட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் அழகு ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர்தினேஷ்பாபு ஆகியோர் அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் நின்று கொண்டு தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்ததை பார்த்துள்ளனர். அவர்களை பிடிக்கும் போது ஒருவர் தப்பிய நிலையில் இரண்டுபேரை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது செல்வபுரத்தை சேர்ந்த ஹபீப் ரகுமான், சேக் இப்ராகிம்(33), சுதர்சன்(64) தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 192 கேரளா லாட்டரி டிக்கெட், இ-பைக், செல்போன், பணம் 3910/- ஆகியவை கைப்பற்றப்பட்டது. தப்பியோடிய ஹபீப் ரகுமான் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறது.