Others
கோபியில் தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை….
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ளகோபிசீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி இலாகி. கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட் டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்டதும், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.