fbpx
Tamil Newsஇந்தியா

தொடங்கியது அமர்நாத் யாத்திரை ; 25க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்.

ஜம்மூ காஷ்மீரின் பல்தல் என்ற பகுதியில் பகுதியில் இந்துக்களின் பிரசித்தி வாய்ந்த புனித இஸ்தலம் என்ற பெருமையை பெற்ற கோவில் ஒன்று உள்ளது. அப்படிப்பட்ட இந்த கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் செய்கின்றனர்.

மொத்தம் 46 நாட்கள் தொடரும் இந்த பயணம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிறைவு பெரு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு அமர்நாத் புனித யாத்திரை என்று கூறப்படுகிறது. தற்போது இந்த யாத்திரைக்கு பக்தர்கள் குழுவாக செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்த யாத்திரையின் போது 12 ஆயிரம் அடி உயரம் சென்ற அந்த பக்தர்களில் 25க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்தோ திபெத்தில் எல்லை போலீசார் அவர்களுக்கு பிராண வாயு அளித்தனர். இதன் பின்னர் தன அவர்களால் சீராக சுவாசிக்க முடிந்தது. பின்னர் அவர்கள் தங்களின் புனித யாத்திரையை தொடர்ந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close