fbpx
Others

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தேதி: 20.11.2025—சிறப்பு செய்தி

❇️ இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர், விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருமதி அய்மன் ஜமால், இ.கா.ப.,* அவர்களின் உத்தரவின்படி இன்று Scudder Memorial Hospital சார்பில் டாக்டர் இம்மானுவேல் சதீஷ் அவர்களின் தலைமையில் மருத்துவ நிபுணர்களால் காவல்துறையினருக்குமாவட்ட காவல் அலுவலகத்தில் பொம்மை மனித உடல் மற்றும் மின்திரை மூலம் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்பட்டது.   ❇️ இந்த முதலுதவி பயிற்சி வகுப்பில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. விபத்து நடந்த நிமிடத்தில் இருந்து,பாதிக்கப்ட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் வரை உள்ள நேரம் மிகவும் பொன்னானது. ஆகவே அவர்களை எவ்வளவு விரைவாக மருத்துவமனையில் அனுமதிக்க இயலுமோ அந்த அளவு வெகு விரைவாக மருத்துவமனையில் அனுமதித்து அவர்களது உயிரை காப்பாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறுமுதலுதவிபயிற்சிகள்குறித்துஎடுத்துரைத்தனர்.

❇️ மேலும் விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு காவல்துறையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் உதவுவதற்காகவே அரசு “குட் சமாரிட்டன் சட்டம்” (Good Samaritan Law) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி இதுபோன்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பவர்களை பொதுமக்கள் மனிதாபிமானத்தோடு, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கலாம், சிகிச்சைக்கு அனுமதிப்பவர்களிடம் எந்த மருத்துவமனையும் முதலுதவி அளிக்க மறுக்கவோ அல்லது அதற்கு கட்டணம் கேட்கவோ கூடாது. அதே போன்று மருத்துவமனையிலோ, காவல்துறையினரிடமோ உதவி செய்பவர்கள் பெயர் மற்றும் முகவரி போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. விபத்தில் காயம்பட்டவர்களுக்கு உதவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு பொதுமக்கள் தைரியமாக உதவலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close