fbpx
Others

குடியாத்தம்- வீட்டிற்குள் லாரி புகுந்து அரசு பஸ் டிரைவர் பலி.

குடியாத்தம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்ததில் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக காத்திருந்த அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி பகுதியில் வயது மூப்பு காரணமாக ஒருவர் நேற்று இறந்தார். அவரது இறுதி சடங்குக்கு விறகு தேவைப்பட்டதால், குடியாத்தம்-சித்தூர் சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் சிலர் ஏறி கிளைகளை வெட்டியுள்ளனர். சிலர் மரத்தின் அருகே நின்றுகொண்டு விறகுகளை சேகரித்தனர்.அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்தலாரி,அங்கிருந்தவீட்டிற்குள்புகுந்தது.அப்போதுஅங்குநின்றுக்கொண்டிருந்த  அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் எழிலரசன்(40) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை,அங்கிருந்தவர்கள்மீட்டுகுடியாத்தம்அரசுமருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எழிலரசன் பரிதாபமாக இறந்தார். லாரி மோதியதில் வீட்டின் முன்பகுதியும், 2 பைக்குகளும் சேதமடைந்தது.இதனால் ஆத்திரமடைந்த எழிலரசனின் உறவினர்கள், பரதராமி-சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close