விசிகவினர்–ஆணவக் கொலை தடுப்பு தனி சட்டத்தை தமிழக அரசு இயற்றக் கோரிஆர்ப்பாட்டம்
தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்பு தனி சட்டம் இயற்றக் கோரி விசிகவினர் ராணிப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்மத்தோடு நடைபெறும் ஆணவக் கொலையை தடுக்க தமிழக அரசு உடனடியாக ஆவணக்கொலை தடுப்பு தனி சட்டம் இயற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர் இவ்வார்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவர் மான சீ.ம. ரமேஷ் கருர்ணா ,மேற்கு மாவட்ட செயலாளர் பா .பிரபு என்கிற பிரபாகரன் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வி.பிரபா. இளையநிலா ஆகியோர் தலைமை தாங்கினார்ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் ந.ராஜா அனைவரையும் வரவேற்றார் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாவட்ட பொருளாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதி தொகுதி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ,நகர ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகள் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் மகளிர் விடுதலை இயக்க பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர் ஊடக மையம் மாநில முதன்மைச் செயலாளரும் செய்யூர் சட்டமன்ற உறுப்பினருமான பனையூர் மு.பாபு கண்டன உரையாற்றினார் இவ்வார்பாட்டத்தில் மண்டல செயலாளர் மு.வ.சித்தார்த்தன், துணைச் செயலாளர் சோ.தமிழ்,
கோ.வெற்றிவளவன் ,முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ்,முன்னாள் மண்டல செயலாளர் ரத்தின நற்குமரன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர் ராணிப்பேட்டை நகர செயலாளர்கி.ராஜசேகர் நன்றி கூறினார்..