Others
கள்ளிப்பட்டி அருகே மர்ம விலங்கு கடித்து நாய் சாவு….
டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள சின்னக்குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவர் வீட்டுக்கு காவலுக்கு நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று இரவு இவருடைய நாய் கடித்து குதறப்பட்டு இறந்த நிலையில் கிடந்தது. இதைக் கண்டதும் கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்தியூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கால்தடயங்களை பார்வையிட்டு அது சிறுத்தைப்புலியின் கால் தடமா? அல்லது ஏதேனும் மர்ம விலங்கின் கால் தடமா? என விசாரணைநடத்தி வருகின்றனர்.