fbpx
Others

கல்குவாரி அமைப்பது சம்மந்தமாக கருத்து கேட்பு கூட்டத்தில் தள்ளு முள்ளு..

புளியம்பட்டி அருகே கல்குவாரி அமைப்பது சம்மந்தமாக கருத்து கேட்பு கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் . அதிகாரிகள் அதிர்ச்சி…ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குரும்ப பாளையம் கிராமத்தில் கல்குவாரி அமைப்பது சம்மந்தமான கூட்டம் விண்ணப்பள்ளியில் கோபி சப் கலெக்டர் சிவானந்தம்,மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் சுவாமிநாதன், ஆகியோர்தலைமையில் நடை பெற்றது.கூட்டத்தில் குரும்ப பாளையம் கிராமத்தில் கல் குவாரி அமைக்க கூடாதென பெரும்பாலான பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.மேலும் சம்மந்த பட்ட கிராமத்திற்கு சம்மந்தம் இல்லாத வெளியூர் நபர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கல்குவாரி அமைக்க வேண்டும் என மனு கொடுக்க முயற்சிசெய்தனர்.கூட்டத்தில்வெளியூர்நபர்கள்கருத்துகூறமுற்பட்டபோதுகூட்டத்தில்கடும்வாவாக்குவாதம்ஏற்பட்டுகைகலப்பானது.போலீசாருக்கும், பொது மக்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்பு சப் கலெக்டர் ஆதார் கார்டு உள்ளூர் முகவரியில் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்று கருத்து கூறலாம் என கூறியதை தொடர்ந்து வெளியூர் நபர்கள் கும்பலாக வெளியேறி போனார்கள். பின்பு தமிழ் நாடு சுற்று சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கல் குவாரி அமைப்பதற்கான அரசு விதிகள், மற்றும் பல்வேறு முறை கேடுகள் செய்து அதிகாரிகள்கல்குவாரிக்குஅனுமதிகொடுத்துள்ளதாக ஆதாரங்களுடன் பேசினார். ஒரு கட்டத்தில் கடுப்பான அதிகாரிகள் நேரம் அதிகமாகி விட்டது என கூற பேச்சை முடித்து கொண்டார்.பின்பு கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைமை முடிவு எடுக்கும் என அதிகாரிகள் வழக்கமான பதிலை கூறி சென்றனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close