தவெகநிர்வாகிகள்புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் விரைவில் கைதாவார்களா..?
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெகநிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார்முன்ஜாமின்மனுமீதானவிசாரணைநடைபெற்றது.அப்போது, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கைவைத்தனர். இதற்கிடையே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.பின்னர், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.இன்றே உத்தரவுபிறப்பிக்கப்படும்எனநீதிபதிகள்தெரிவித்துள்ளதால்நீதிமன்றஇணையதளத்தில் மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது