fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

எழுத, படிக்க தெரியாதவருக்கு மந்திரி பதவி !! ஏழை மக்களுக்காக உழைப்பேன் என பேட்டி !

சில நாட்களுக்கு முன் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்த்தான் , சட்டீஸ்கர் மற்றும் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இவ்வாறு வெற்றிப்பெற்ற சட்டீஸ்கர் மற்றும் மத்தியபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜ விடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் தன் கை மாற்றியது.

இதையடுத்து சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகெல் கடந்த 17-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து டி.எஸ்.சிங் தியோ மற்றும் தம்ராத்வாஜ் சாஹு போன்றோர் மட்டும் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.

தற்போது முதல்மந்திரி பூபேஷ் பாகெல் தன் அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். இந்த அமைச்சரவைக்கு ஒரு பெண் உட்பட 9 பேர் மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவிப்பிரமானதை அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் அவர்கள் செய்து வைத்தார். அனைவரும் இந்தியில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

பதவியேற்பின் போது கோண்டா தொகுதி எம்.எல் ஏ வாக எழுதப்படிக்க தெரியாத கவாசி லக்மா பதவியேற்றார். அவருக்கு எழுதப்படிக்க தெரியாததால் பதவியேற்பின் போது தன் கையில் இருந்த தாளை பார்க்காமல் ஆளுநர் கூறியதையே அப்படியே கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

நான் ஏழை குடும்பத்தில் பிறந்ததால் சிறுவயதிலிருந்தே பள்ளிக்கும் செல்லவில்லை. இவ்வாறு எழுதப்படிக்க தெரியாத நிலையில் இருந்தும் இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தது.சமூகத்தில் அனைத்து தரமக்களும் என்னை விரும்புவதால் நான் இப்போது மந்திரியாகியுள்ளேன்.

இவ்வாறு வெற்றியடையவைத்த என் ஏழை மக்களுக்காக நான் கடுமையாக உழைப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close