fbpx
RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

நாகூர் ஆண்டவர் கைவிட்டதன் எதிரொலி:அப்பாவி சிறுவன் கடல் நீரில் மூழ்கி இறந்தான்!!

நாகப்பட்டினம்:

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் நாகப்பட்டினம்  அடுத்த நாகூர் தர்காவுக்கு வழிபாட்டுக்காக வந்திருந்தார். இந்நிலையில் இஸ்மாயில் குடும்பத்தினர் மதியம் கடற்கரையில் உள்ள சில்லடி தர்காவுக்கு சென்று வழிபட்டுவிட்டு கடலில் குளித்துள்ளனர்.

அப்போது கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் அலையில் இஸ்மாயில் மகன் சபீர் (15) மூழ்கினார்.

இதில் அதிர்ச்சி அடைந்த இஸ்மாயில் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தம் போட்டு அழுதனர். இதற்கிடையே கடலில் சபீர் மூழ்கி பலியான நிலையில் கரையில் உடல் ஒதுங்கியது.

நாகூர் ஆண்டவர் கைவிட்டதாலேயே அப்பாவி சபீர் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை போலீசார் சபீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Related Articles

Back to top button
Close
Close