ஈரோடு-சத்தியமங்கலத்தில் மதநல்லிணக்கத்திற்கான சந்திப்பு நிகழ்ச்சி.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மதநல்லினக்கத்திற்கான சகோதரத்துவ சந்திப்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் சர்வ மதத்தினர் உறுப்பினர்களாக கொண்ட பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் சத்தியமங்கலத்தில் புதன்கிழமை வயநாட்டில் உயிரிழந்தோருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி தலைமை வகித்தார். பஞ்சாப் குரு துவார கமிட்டி டோனி சிங் ஜி முன்னிலை வகித்தார். இதில் பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவரும் தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் முகமது ரஃபி பங்கேற்று பேசுகையில் அனைத்து மதத்தினருக்கும் அனைத்தும் என்ற திட்டத்தின் கீழ் ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதியுதவியும் ஜெருசேலம் மற்றும் இந்து கோவில்கள் செல்ல நிதி ஒதுக்கியுள்ளார். வழிபாடுகள் வெவ்வேறாக இருந்த போதிலும் வெளியே வரும் அனைவரும் இந்தியர்கள் என்பதை உண்மை. ஈரோட்டில் மாமன் மச்சான் உறவு போல மத நல்லிணக்கத்துக்கான சசோதரத்துவம் தொடர வேண்டும் வலியுறுத்தவே இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது..