கடந்தஅக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 222 இஸ்ரேலிய யூதர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் உடனான போரை குறைக்க வேண்டும் என்றாலோ, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றாலோ, 222 பிணை கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருக்க கூடிய நாடுகளான ஈரான், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தபடுகிறது. காசா பகுதியில் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலைஉள்ளது. தொடர்ச்சியாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் நிலையில், தாக்குதலை குறைப்பதற்காகவும், மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்காகவும் முதற்கட்டமாக பிணைய கைதிகளை வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் குவைத்தின் பிரதமர் ஹமாசின் அரசியல் பிரிவு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதனை தொடர்ந்து பிணைய கைதிகளில் வயதானவர்கள் 2 பேரும், அமெரிக்கர்கள் 2 பேரும் விடுவிக்கபட்ட்னார். இது போன்று பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒரு 50 பேரை முதற்கட்டமாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்தபேச்சுவார்த்தையில்முன்னேற்றம்அடைந்திருப்பதாகவும்தெரிவிக்கபட்டுள்ளது.பிணைய கைதிகளை தொடர்ச்சியாக விடுவிக்கும்பட்சத்தில் போர் சூழல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.