fbpx
Others

இராணிப்பேட்டை– குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உறுதிமொழி சிறப்பு செய்தி..

12.06.2025 அன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
.விவேகானந்த சுக்லா. அவர்கள் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர்கள்
.ராமச்சந்திரன் மற்றும் .ரமேஷ் ராஜ் ஆகியோர் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (Anti – Child Labour Day) உறுதிமொழி எடுக்கப்பட்டது.எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிமொழியானது கீழ்க்கண்டவாறு,இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும் அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.இதில் காவல் அதிகாரிகள், ஆளினர்கள், அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் ஆயுதப்படை தலைமையகத்திலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

Related Articles

Back to top button
Close
Close