இந்திய அரசியலை திரும்பி பார்க்க வைக்கும் பெண் ?..யாரிந்த “புரந்தேஸ்வரி” ?
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். சபாநாயகர் பதவியை பெறுவதற்கான ரேஸில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலையில் இருக்கிறதாம். 2024 லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் லோக்சபா ஸ்பீக்கர் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா சபாநாயகர் பதவியை தேர்வு செய்வது கடினமானது. சபாநாயகர் பதவி கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். அதே சமயம் மைனாரிட்டி அரசு அமையும் போது, கூட்டணி ஆட்சியின் போது ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் அபாயம் உள்ளது. லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் முடிவுகள் மோடி 3.0 ..அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு! கூட்டணி கட்சிகளுக்கு என்ன துறைகள்? குமாராசாமிக்கு லக் முக்கியமாக நம்பிக்கையில்லா தீர்மானம், குதிரை பேரம், எம்பிக்கள் தகுதி நீக்கம் போன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சபாநாயகர் பதவி முக்கியமானதாக மாறும். தீவிர முயற்சி: இதில், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் பாஜக கூட்டணியில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநில பாஜக தலைவரும், ராஜமுந்திரி எம்.பி.யுமான டக்குபதி புரந்தேஸ்வரி 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். இவரை சபாநாயகராக்க வேண்டும் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறதாம். இதனால் இவரை பற்றிய “ஹிஸ்டரியை” டெல்லி பாஜக ஆய்வு செய்து வருகிறதாம். அதோடு அமித் ஷாவும் இவர் நெருக்கமாக “வாட்ச்” செய்து வருகிறாராம்.