இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிதேனி மாவட்ட கிளை— சிறப்பு செய்தி
77வது ஜெனீவா ஒப்பந்த நாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேனி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் வேலம்மாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியைச் சார்ந்த மாணவி செல்வி ES.பியூஜிட்டா அவர்கள் பேச்சுப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். யூத் ரெட் கிராஸ் சார்பில் அரசு சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி M.நித்யஸ்ரீ அவர்கள் கட்டுரை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டு மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வ.சிவ கிருஷ்ணமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ், பாராட்டு பதக்கம் மற்றும் ரூ.3000/-க்கான காசோலைகளை வழங்கி பெருமைப்படுத்தினார்.தேனி மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் திரு.க.சுருளிவேல், தேனி மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஆர்.லாவண்யா, வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர் திரு.பிரசன்னா, உறுப்பினர் திரு. சரவணகுமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வேல்முருகன் ஆண்டிபட்டி செய்தியாளர்

