fbpx
Others

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கம்,,,

ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பதவி பறிப்பு! அகில இந்திய தலைமை நடவடிக்கை… – today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி பொற்கொடிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகளை, பொற்கொடி தலைமையிலான 500க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் ஒன்று திரண்டு நேரில் சந்தித்திருந்தனர்.அப்போது, மாநில தலைவராக உள்ள ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் புகார் தெரிவித்திருந்தார். ஆம்ஸ்ட்ராங் அவர்களால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை தற்போதைய தலைவர் ஆனந்தன் நீக்கி இருப்பதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொறுப்பாளர் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங்க் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசியத் தலைவரின் உத்தரவின்படி கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கபப்பட்டுள்ளது.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது  குடும்பத்தை கவனித்து கொள்ளவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்தும் வகையிலும் பதவி விலக்கப்பட்டுள்ளது. பொற்கொடி இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார் எனவும், மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close