fbpx
Others

ஆம்ஸ்ட்ராங் மனைவி புதிய அரசியல்கட்சி தொடங்கினார்…

ex tn bsp chief armstrongs wife porkodi starts new partyபகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை முதல் அவரது முதலாம்ஆண்டுநினைவுதினநிகழ்வுகள்நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவியான பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயரில் புதிய அரசியல்கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி தொடர்பான கொடியையும் அவர் அறிமுகம் செய்துவைத்தார். நினைவேந்தல் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 50 அடி கொடி கம்பத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கொடியையும் அவர் ஏற்றி வைத்தார்.மறைந்த ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்தார். அவரது மனைவிக்கும் அந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு அவரது மனைவி பொற்கொடி கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தமிழ் மாநில ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close