Others
பெரம்பூரில்-ஆம்ஸ்ட்ராங் கட்டிய புத்த கோயில்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், புத்த மதத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். 1956-ல் டாக்டர் அம்பேத்கர் நாக்பூரில் புத்தமதத்தை தழுவிய இடத்தில்,வழிபாட்டுதலம்எழுப்பப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், அதேநாளில் நாக்பூரில் உள்ள அந்த வழிபாட்டு தலத்துக்கு நாடுமுழுவதும் இருந்து ஏராளமானோர் செல்வார்கள்.தமிழகத்தில் இருந்து நாக்பூர்புத்தவழிபாட்டுதலத்துக்குசெல்வோருக்கு, அவர்களுக்கான ரயில் கட்டண செலவு முழுவதையும் இவரே ஏற்று ஆண்டுதோறும் உதவி செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட நாக்பூருக்குசெல்லும் ஒரு சிறப்பு ரயில் முழுவதையும் முன்பதிவு செய்து,தன்னுடன் அனைவரையும் நாக்பூர் புத்த வழிபாட்டுதலத்துக்கு ஆம்ஸ்ட்ராங் அழைத்து சென்றார்.இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு புத்தமதத்தின் மீதான ஈர்ப்பால் பெரம்பூரில் அவர் வசிக்கும் பகுதி அருகே, புத்த கோயிலை ஆம்ஸ்ட்ராங் கட்டியுள்ளார். அங்கு தினமும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். பலர், ஆம்ஸ்ட்ராங்குக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அந்த புத்த கோயிலில் சிறிது நேரம் மவுனமாக அமர்ந்துவிட்டு சென்றனர்…