Others
ஆட்டந் தாங்கல்–நாடார்கள் சமூகநல பாதுகாப்பு சங்க மாதாந்திர ஆலோசனை கூட்டம்..
நாடார்கள் சமூகநல பாதுகாப்பு சங்க மாதாந்திர ஆலோசனை கூட்டம் நல்லூர் ஊராட்சி ஆட்டந் தாங்கல் பகுதியில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர். சங்கரலிங்கம் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர். சண்முக சுந்தர பெருமாள் நாடார் வரவேற்றார்.கூட்டத்தில் வருகிற ஜூலை மாதம் 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்றும் பெருந்தலைவர் காமராஜருக்கு முழு உருவச் சிலை அமைப்பதற்கான இடத்தை தயார் செய்து சிலையை திறப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் சங்க பொருளாளர். தாளமுத்து நாடார் நன்றி கூறினார்.