fbpx
Others

103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Pamban Bridge Rameswaram PM Modiஇந்தியாவில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300 ரயில் நிலையங்கள் மேம்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.24,470 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள்மேம்படுத்தும்பணிதொடங்கப்பட்டது.சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற பணிகளில் இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக தமிழகம், கேரளம், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 103 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டன. இந்த ரயில்நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் (மே 22) திறந்து வைத்தார்.இந்த ரயில்Vande Bharat Express நிலையங்களில் தெற்கு ரயில்வேயில் 13 ரயில் நிலையங்களும், தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களும் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் ஏற்கெனவே இருந்த வசதிகளுடன் சேர்த்து தற்போது புதிதாக பல்வேறுகூடுதல்வசதிகள்மேம்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி, புதிய மின்தூக்கி (லிப்ட்), நடை மேம்பாலம், கூடுதல் அறைகள், கண்காணிப்பு கேமராக்கள், பன்னடுக்குவாகனநிறுத்துமிடங்கள்,நுழைவுவாயில்கள்சீரமைப்பு,5ஜிஇணையசேவைஉள்ளிட்டபல்வேறுஅடிப்படைவசதிகள்மேம்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் சென்னையில் தாமஸ் மவுன்ட், பரங்கிமலை, கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீ ரங்கம், போளூர் மற்றும் மன்னார்குடி, குழித்துறை, சாமல்பட்டி ஆகிய9ரயில்நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன.இதேபோல, ஆந்திர மாநிலத்தில் சூளுர்பேட்டை ரயில் நிலையம், புதுச்சேரி மாநிலத்தில் மாஹி ரயில் நிலையம், கேரளத்தில் சிராயினிகில் ரயில் நிலையம் ஆகிய ரயில் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.சென்னை பரங்கிமலை ரயில் நிலைய திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர்எல்.முருகன்,சிதம்பரம்ரயில்நிலையதிறப்புவிழாவில்திருமாவளவன்எம்.பி.,ஸ்ரீரங்கம்ரயில்நிலையத்தில்மதிமுகஎம்.பி.துரைவைகோஉள்ளிட்டோர்பங்கேற்றனர்.இதேபோல, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரும் மற்ற ரயில் நிலையங்களும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இந்த மேம்பாட்டு பணிகளால் அனைத்து ரயில் நிலையங்களும் புதிய தோற்றத்தில் மிளிருகின்றன.

Related Articles

Back to top button
Close
Close