திருப்பூர்–தேசிய தேவாங்கர் முன்னேற்றக் கழகத்தின் சிறப்பு செய்தி…
ஆகஸ்ட்7 திருப்பூர்மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில், தேசிய தேவாங்கர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக.. தேசிய தேவாங்கர் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் K. முத்து கருப்பணசாமி அவர்கள் தலைமையில். மாநில ஆலோசனை குழு தலைவர் திரு R. ஆசைத்தம்பி அண்ணன் அவர்கள் முன்னிலையில். மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு S. முத்து கருப்பணசாமி ,மாநில துணை பொது செயலாளர் திரு மல்லிகார்ஜுனன், ஹிந்தி பண்டிட் ,மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ்குமார், மாநில இளைஞரணி செயலாளர் முரளி, மாநில தொழிலாளர் நல துறை தலைவர் திரு K. குருநாதன். வெளிநாடு வாழ் தேவாங்கர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு பிரசன்ன முரளி, மாநில ஊடகவியல் பிரிவு தலைவர் திரு காமாட்சி, ஆகியோர்கள் இணைந்து உலக கைத்தறி தின விழா, சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதில் ஆண் பெண் இருபால் நெசவுத் தொழிலாளர்களையும் அழைத்து அவர்களை கௌரவப்படுத்தப்பட்டது ,மேலும் சிறப்பான முறையில் அன்னதானமும் வழங்கப்பட்டது, இதில் சிறப்பு அழைப்பாளராக தேவாங்கர் தீபம் பத்திரிகை ஆசிரியர் திரு தினேஷ் குமார் அண்ணன் அவர்கள் திரு சௌந்தரராஜன் அண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.